• May 03 2024

விஜய், சிம்பு, ரஜினிகாந்த், ஷாருக்கான் உட்பட ஏராளமான பிரபலங்களின் ப்ளூ டிக் இரவோடு இரவாக பறிமுதல்.. நடந்தது என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய காலத்திலிருந்து தற்போது வரை அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றார். அவ்வாறான மாற்றங்களில் ஒன்று தான் சந்தா கட்டி ப்ளூ டிக் பெறுவது. அந்தவகையில் எலான் மாஸ்க் டுவிட்டரை வாங்க முதல் அதிக பாலோவர்களை கொண்ட பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர், நடிகைகள் ஆகியோருக்கு மட்டும் ப்ளூ டிக் கொடுக்கப்பட்டது.

எலான் மஸ்க் வந்ததன் பின்னர் சந்தா செலுத்தினால் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்ள முடியும் எனகூறப்பட்டது. இதனால் டுவிட்டர் கணக்கை பயன்படுத்தும் சாமானிய மக்களும் ப்ளூ டிக் பெற முடிந்தது. 


மேலும் இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் டுவிட்டரில் ஏற்கனவே ப்ளூ டிக் பெற்றிருந்தவர்கள் அதனை தொடர வேண்டும் என்றால் அதற்கான சந்தா செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்ததோடு, அதற்கு காலக்கெடுவும் விதித்திருந்தார். அந்த காலக்கெடு ஆனது நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. 


இதனைத் தொடர்ந்து சந்தா கட்டாத பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூ டிக் தற்போது நீக்கப்பட்டு உள்ளது. இதனால் மில்லியன் கணக்கிலான பாலோவர்களைக் கொண்டவர்களும் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர். அந்தவரிசையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராகுல் காந்தி, அண்ணாமலை உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களை கூற முடியும்.


அதுமட்டுமல்லாது விராட் கோலி, எம்.எஸ்.தோனி, கே.எல்.ராகுல். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கால்பந்து வீரர் ரொனால்டோ உள்பட ஏராளமான விளையாட்டு வீரர்களும், ரஜினிகாந்த், விஜய், கார்த்தி, சீயான் விக்ரம், சிம்பு, ஷாருக்கான் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்களும் டுவிட்டரில் தமது ப்ளூ டிக்கை இழந்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement