'அசுரன்' படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது நடிகர் சூரியை கதாநாயகனாக்கி 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘விசாரணை’ படம் போலவே இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி வருகிறது. எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
மேலும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றது. இதுதொடர்பான புகைப்படங்களை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 2 ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
#Viduthalai - Shooting on full swing.@sooriofficial @VetriMaaran @ilaiyaraaja @elredkumar @rsinfotainment @mani_rsinfo @VelrajR @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/bEoyvGpxAX
— VijaySethupathi (@VijaySethuOffl) May 21, 2022
எனினும் தற்போது வெளியாகியுள்ள 'விடுதலை' படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இதன் டெஸ்ட் ஷுட்டிங் அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Listen News!