• Jan 19 2025

விஜய் கட்சிக்கு எந்த சின்னம்? ஒட்டுமொத்த மாணவர்களை கவர மாஸ் திட்டம்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

அரசியலில் வெற்றி பெற சின்னம் ஒரு மிகப்பெரிய விஷயமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக உதயசூரியன், இரட்டை இலை ஆகிய சின்னங்கள் பட்டி தொட்டி எங்கும் பரவி இருக்கும் நிலையில் விஜய் தனது கட்சியின் சின்னமாக எல்லோர் மனதிலும் அதுபோல் எளிதில் பதியும் வகையில் குறிப்பாக மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மனதில் பதியும் வகையில் ஒரு சின்னத்தை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்திடமிருந்து சின்னம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. 



விஜய் மனதில் ஒரு சில சின்னங்கள் இருந்தாலும் அவருக்கு புத்தகம் அல்லது பேனா ஆகிய இரண்டில் ஒன்றை பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிகிறது. மாணவ மாணவிகளின் வாக்குகளை தான் விஜய் குறி வைத்துள்ளதால் அவர் இந்த சின்னத்தை பெற விரும்புவதாகவும் இப்போது மாணவர் மாணவ மாணவிகளாக இருப்பவர்கள், தான் தேர்தலில் போட்டியிடும் போது வாக்களிக்கும் தகுதியை பெற்று விடுவார்கள் என்பதால் ஒட்டுமொத்த மாணவர்களை கவரும் வகையில் சின்னம் இருக்க வேண்டும் என்று விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் அதை நோக்கி காய் நகர்த்தி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

விஜய்க்கு அவர் நினைத்த புத்தகம் அல்லது பேனா  சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையம் அவரது கோரிக்கையை ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement