• May 04 2024

அஜித்துடன் இணைவது குறித்து லோகேஷ் சொன்ன சுவாரஸியம்- அப்படி என்றால் LCU கான்செப்ட்டில் நீடிக்குமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த மாதம் ஆரம்பித்த நாளிலிருந்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.. பான் இந்தியா படமான இப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் நடிகர் ரஜினிகாந்துடன் கூட்டணி அமைக்கவுள்ளார். ஏற்கனவே கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பதும் முக்கியமாகும்.இந்நிலையில், கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித்துடன் லோகேஷ் இதுவரை இணையவில்லை. இதனால் இது பற்றி அண்மையில் கேட்டிருந்தனர்.


ப்ரமோஷனில் கலந்துகொண்ட அவரிடம், லோகேஷின் யுனிவர்ஸில் அஜித் இணைவாரா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ், அஜித்துடன் இணைய வேண்டும் என விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், அதற்கான சான்ஸ் விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் லோகேஷ் கூறியுள்ளது, அஜித் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. 


சில மாதங்களுக்கு முன்னர்  கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் அஜித்துடன் இணைவது குறித்து பேசியிருந்தார். "அஜித்துடன் பணிபுரிய தனக்கு ஆசை உள்ளது. சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக அஜித் சாரை வைத்து படம் இயக்குவேன்" என கூறியிருந்தார். அப்படி வாய்ப்புக் கிடைத்தால் அந்தப் படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement