• May 08 2024

ஐஸ்வர்யா ராஜேஷின் சூழல் வெப் தொடரைப் பாராட்டிய தனுஷ்- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் வெப் தொடர் தான் சூழல். இத் தொடரை இயக்குநர் பிரம்மா மற்றும் அரவிந்த் இயக்கியுள்ளனர்.

இத்தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் , கதிர், ஆர். பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவ் வெப் சீரிஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் மட்டுமல்லாமல் முப்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

சமீபத்தில் இத் தொடரின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தனது தங்கையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கதிர் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் அமேசான் பிரைம் வீடியோவில் சூழல் வெப் சீரிஸ் நேற்று வெளியானது.

இந்நிலையில் இந்த சீரிசை பற்றி பாராட்டி நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு "சிறப்பான கிரைம் திரில்லர்" ஆரம்பம் முதல் இறுதிவரை உங்களைக் கட்டிப்போடும் ஒரு தொடர். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள், என பாராட்டியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement