• Sep 27 2023

கிரிக்கெட்டைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டிலும் மாஸ் காட்டும் யோகிபாபு- வைரலாகும் வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் ஹீரோவாகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து நம்மை மகிழ வைத்து வருகிறார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பரவலாக நடித்து வருகின்றார்.

நடிப்பைத் தாண்டி ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள இவர் தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


அண்மையில் வெளியாகி வசூலில் அள்ளிக்குவித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய காமெடி ரசிகர்களை பெரிதும் கவரச் செய்தது.

சமீப காலமாக யோகி பாபு மாநில அளவில் கால்பந்தாட்ட வீரராக விளையாடியவர் என்ற செய்தியும் பரவலாக பரவி வருகிறது.அதன்படி தற்பொழுது சிறுவர்களுடன் சேர்ந்து கால்ப்பந்தாட்டம் ஆடியுள்ளார்அந்த வீடியொ வைரலாகி வருகின்றது.

மேலும் இவர் கால்பந்தாட்டத்தைத் தவிர கிரிக்கெட்டிலும் ஆர்வம் உள்ளவர். அதனால் தான் அண்மையில் டோனி பஃட் ஒன்றைப் பரிசாக அளித்திருந்தார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement