• Sep 21 2023

leo பட ஷுட்டிங் ஸ்பாட்டில் கெத்தாக நடந்து வந்த vijay- இதுவரை யாரும் பார்த்திடாத வீடியோ

stella / 1 month ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் லியோ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் மிஷ்கின் என பலர் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து விஜய் தன் 68-வது படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளார். படத்தின் முதற்கட்ட வேலைகள் துவங்கி இருக்கும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது தவிர விஜய் சமூக சேவையிலும் அதிகம் ஈடுபட்டு வருகின்றார். இதனால் விரைவில் அரசியலில் இணைந்து விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அத்தோடு அண்மையில் த்ரிஷாவுடன் நோர்வேக்கு சென்றிருந்ததாக வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது.

இதனை அடுத்து தற்பொழுது விஜய் லியோ பட ஷுட்டிங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.இதில் விஜய் லியோ படக் கெட்டப்பில் மாஸாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement