• May 07 2024

அமைச்சரான கணவர்... கட்டியணைத்து கண்ணீர் வடிக்கும் மனைவி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். அதுமட்டுமல்லாது தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்று வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் வெளியான பல ஹிட் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் ரிலீஸ் செய்தது.


அத்தோடு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் 35-ஆவது அமைச்சராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அதாவது அவருக்கு தமிழக ஆளுநரான ஆர் என் ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதைத் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ஆன கையோடு மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தன் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று உறுதி வாக்கு அளித்தார்.


மேலும் அவர் பேசுகையில் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி படம் என்றும் தெரிவித்தார். அத்தோடு கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தில் இருந்தும் விலக உள்ளதாக தற்போது தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.


இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு கீழே அமர்ந்திருந்த அவரது குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அம்மா, மனைவி, மகள், அத்தை, மாமா என ஒவ்வொருவராய் அனைவரையும் கட்டியணைத்தார் உதயநிதி ஸ்டாலின்.


அப்போது உதயநிதியின் மனைவியான கிருத்திகா உதயநிதி கண்கள் கலங்க தனது கணவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலினும் கிருத்திகாவும் கல்லூரியில் ஒன்றாக படித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement