• Apr 15 2026

"மை லார்ட்" திரைப்படத்தைப் பாராட்டிய நடிகர் சூர்யா.. லீக்கான வீடியோ.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் தன்னுடைய தனித்துவமான பாதையை உருவாக்கியவர் சசிகுமார். சமூக அக்கறையுடன் கூடிய கதைகளையும், நெஞ்சை தொடும் மனிதநேய படைப்புகளையும் வழங்கி வந்த அவர், தற்போது ‘மை லார்ட்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்.


பிப். 13ஆம் தேதி வெளியாகியுள்ள மை லார்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை சமூக நுணுக்கங்களை கூர்மையாக கையாளும் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியுள்ளார்.

சசிகுமார் – ராஜூ முருகன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. சமூக பிரச்சினைகளை கதை சொல்லும் முறை மற்றும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளின் மூலம் ரசிகர்களை கவரும் ராஜூ முருகனின் இயக்கம், சசிகுமாரின் இயல்பான நடிப்புடன் இணைந்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சார் கதாநாயகியாக நடித்துள்ளார். அவரின் நடிப்பும், கதாபாத்திரத் தேர்வும் பாராட்டுகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலிருந்தே ‘மை லார்ட்’ திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. 


இந்த நிலையில், ‘மை லார்ட்’ திரைப்படத்தின் விநியோகஸ்தராக செயல்பட்டுள்ள நடிகர் சூர்யா, படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சசிகுமார், ராஜூ முருகன் உள்ளிட்ட படக்குழுவினரை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement