• May 05 2024

நயனுக்கு காதல் கணவர் விக்கி கொடுத்த கிப்ட்! அதன் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன். நயன்தாரவிற்கு ரசிகர் கூட்டங்களே இருக்கின்றது. இவர் சினிமாவிற்குள் நுழைந்தததில் இன்றுவரை பிரகாசமாக மிளிரும் ஓர் நட்சத்திரமாகவே இருக்கின்றார்.


2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நடித்தார். அதன் பின்னர்  இருவருக்கும் காதல் ஏற்பட்டு   கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்களுக்கு உயிர், உலக் என இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.  


லேடி சூப்பர் ஸ்ட்டார் நயன் நடிப்போடு நின்றுவிடாது  தற்போது 9 Skin என்ற புதிய பிஸ்னஸ் ஒன்றையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார் இந்நிலையில் நயன்தாரா ரசிகர்கள் இவர் தாெடர்பான  செய்திகளை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நயன்தாராவின் பழைய புகைப்படத்துடன் அவரின் அழகான வாட்ச் ஒன்றும் வைரலாகி வருகின்றது.


இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் கிப்ட்டாக கொடுத்த வாட்ச் பற்றி கூறியிருந்தார். அதாவது அந்த வாட்ச் ரோலக்ஸ் கம்பெனியை சார்ந்ததாகவும் 31 mm டைலரைக் கொண்டதாகவும், டைமண்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ள அந்த வாட்ச் 23 இலிருந்து 26 லட்சம் ரூபா வரை இருக்கும் என  தெரிவித்திருந்தார்.  இது தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement