• May 04 2024

மகன்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய விக்கி-நயன்... இணையத்தைக் கலக்கும் வீடியோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 9ம் தேதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இதனை அடுத்து அதே ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்திருந்தனர். பல சர்ச்சைகளின் பின்னர் இந்த குழந்தை விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்தது. அத்தோடு குழந்தை பிறந்ததில் இருந்து இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்றைய தினம் மகன்களின் உடைய முதலாவது பிறந்தநாள் ஆகும். இதனை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக பல விதமான கேக்குகளை மலைபோல் அடுக்கி வைத்து மகன்களின் பிறந்தநாளை செம்ம கிராண்ட் ஆக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.


இதுகுறித்த புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement