• Jan 18 2025

நயனை உருகி உருகி காதலித்த விக்கி..! பர்த்டே ஸ்பெஷலாக இறக்கிய எமோஷனல் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக காணப்படும் நயன்தாரா இன்றைய தினம் தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவின் திருமண ஆவணப்படமும் இன்றைய தினம் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

குறித்த ஆவணப்படத்தில் தான் திரையுலகில் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள், காதல் தோல்வி, கல்யாணம் என அனைத்தையும் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நயன்தாரா. இதனை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

d_i_a

கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவன்  அவர்களுக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது காதலிக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட ஆறு வருடம் காதலித்த இவர்கள் பலரும் வியக்கும் வகையில் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.


இதற்கிடையில் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாவதற்கு இரண்டு வருடம் ஆனது. அதற்கு முக்கிய காரணமே தனுஷ் தான். மூன்று நிமிட வீடியோக்கு 10 கோடி ரூபாய் கேட்கின்றார். தன் மீது உள்ள பழிவாங்கல் காரணமாக இந்த ஆவண படத்தை வெளியிடுவதில் தடையாக இருந்தார் என நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இந்த விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக வலம் வருகின்றது.

இந்த நிலையில், தனது காதல் மனைவி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா  பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாராவுடன்  ஆரம்பித்த காதல் முதல் உயிர், உலக் பிறந்த தருணத்தில் இருந்து அழகிய எமோஷனல் காட்சிகளை மிக அழகாக எடுத்து வெளியிட்டுள்ளார் விக்கி. தற்போது இதை பார்த்த பலரும் தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement