• May 18 2024

விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் வைத்த புதிய டுவிஸ்ட்- கடைசியில் இப்படிப் பண்ணிட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய இயக்குநரான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘விடுதலை’. இப்படத்தில் கதாநாயகனாக காமெடி நடிகர் சூரி நடித்துள்ளார். விஜய்சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலானது.அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘விசாரணை’ படம் போலவே இந்த படத்தையும் வித்தியாசமாக முறையில் இயக்கி வருகின்றார் வெற்றிமாறன்.

இப்படத்தின் படப்பிடிப்பானது ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் லேட்டஸ்ட்டாக வெளியாகிய தகவலின் படி இந்தப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுதலை’ படத்தினை முடித்துவிட்டு சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார்.இதற்கான டெஸ்ட் ஷுட்டிங் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement