• May 18 2024

ரித்திக் ரோஷன் கட்டாயம் இரண்டாவது திருமணம் செய்வார்- ஜோதிடர் சொன்ன ரகசியம் - மணப் பெண் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் ரித்திக் ரோஷன். இவர் சூசன் கான் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ரிதான், ரிஹான் என இரண்டு மகன்கள் உண்டு.

இவர்கள் இருவரும் இப்போது விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழும் நிலையில் இருமகன்களும் தாய் சூசன் கானுடன் வசித்து வருகின்றனர்.சூசன் இப்போது நடிகர் அர்ஸ்லான் கோனியை காதலித்து வருகிறார் .

நடிகையும், இசைக் கலைஞருமான சபா ஆசாத்தை காதலிக்கிறார் ரித்திக் ரோஷன்.சூசன், அர்ஸ்லான், ரித்திக், சபா ஆகியோர் அவ்வப்போது சந்தித்து பார்ட்டி பண்ணுகிறார்கள். இந்த நான்கு பேரையும் ஒன்றாக பார்க்கும் ரசிகர்கள் வியக்கிறார்கள்.முன்னதாக ரித்திக் ரோஷனும், சூசன் கானும் பிரிந்த போது ரித்திக் வாழ்வில் மீண்டும் திருமணம் நடக்கும் என பிரபல ஜோதிடரான பெஜன் தாருவாலா தெரிவித்தார்.

பிரபலங்களின் வாழ்க்கை குறித்து கணித்து சொல்வதற்கு பெயர் போனவர் தாருவாலா. இந்நிலையில் ரித்திக்கின் வருங்கால மனைவி சபா ஆசாத் தானா என்று பாலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.சூசனை பிரிந்த பிறகு பல ஆண்டுகளாக சிங்கிளாக இருந்த ரித்திக் தற்போது தான் கமிட்டியாகியிருக்கிறார். ரித்திக் ரோஷனின் குடும்பத்தாருடனும் அதிக நேரம் செலவிடுகிறார் சபா என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement