• May 04 2024

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்த வெற்றிமாறன்- இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விடுதலை திரைப்படத்தின் முதலாம் பாகம் கடந்த 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில்  சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

 குறிப்பாக தமிழ்நாட்டில் ஆயுதம் ஏந்திய நக்சல்பாரிகளான தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரின் வாழ்க்கையையும், அவர்கள் செய்த சம்பவங்களையும் வைத்துதான் விடுதலை படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை பலரும் கொண்டாடினர். ஆனால் வெற்றிமாறன் இந்த கதைக்களத்தில் சில இடங்களில் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டார். தமிழரசன் குறித்தும், புலவர் கலியபெருமாள் குறித்தும் ஒழுங்காக காட்சிப்படுத்தவில்லை என ஒருஅதரப்பினர் விமர்சனத்தையும் முன்வைத்தனர்.


அதுமட்டுமின்றி காவல் துறையின் கோர முகத்தை விசாரணையிலேயே தோலுரித்துக்காட்டிய வெற்றிமாறன் இந்தப் படத்திலும் அதனை செய்திருக்கிறார். ஆனால் ஒரே டெம்ப்ளேட்டாக இருக்கிறது. முக்கியமாக சூரி துப்பாக்கி எடுத்து சுடும் காட்சிகள் எல்லாம் ஒரு ஹீரோயிசம் போலவே இருக்கின்றன. விசாரணையில் காவல் துறையினரின் வன்முறையில் பல காட்சிகளில் பதற வைத்த வெற்றிமாறன் இப்படத்தில் ஒருவித சலிப்புத்தன்மையையே கொடுத்திருக்கிறார். 

அதுமட்டுமின்றி காவல் துறை மக்களை சுடும் காட்சியில் எல்லாம் எதற்காக இளையராஜா மாஸாக பிஜிஎம் போட்டிருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினர். அதேபோல், பெண்களின் நிர்வாண காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்து பதைபதைக்க வைத்தாலும் அந்தக் காட்சிகள் சரியான இம்பேக்ட்டை உருவாக்கவில்லை. எனவே தனக்கென்ற ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கி அதற்குள் வெற்றிமாறன் சிக்கிக்கொண்டாரோ எனவும் சிலர் குரல் எழுப்பினர்.


இப்படி சிலர் விமர்சனத்தை எழுப்பினாலும் விடுதலை படத்தை பலரும் கொண்டாடவே செய்கின்றனர். மேலும், எப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வரும் எனவும் காத்திருக்கின்றனர். அந்த பாகமானது இன்னும் நான்கு மாதங்களில் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் விடுதலை இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது.

 அதாவது விடுதலை 2 டிசம்பர் மாதம்தான் ரிலீஸ் ஆகவிருக்கிறது. படத்தில் சில வேலைகள் இன்னமும் பாக்கி இருப்பதால்தான் இந்த தாமதம் என கூறப்படுகிறது. அதேசமயம், விடுதலை முதல் பாகத்திற்கு விமர்சனங்கள் வரும் என்று வெற்றிமாறன் எதிர்பார்க்கவில்லை. எனவே இரண்டாம் பாகத்தை இன்னமும் செம்மையாக்கி முதல் பாகத்திற்கு கிடைத்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கவே வெற்றிமாறன் சுதாரித்து ரிலீஸை தாமதமாக்கியிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement