• May 18 2024

"மை பேபி, என் முயல் குட்டி... அடுத்த ஈஸ்டரை சிறந்ததாக மாற்றுவேன்'' - ஜாக்குலினுக்கு வாழ்த்து தெரிவித்த சுகேஷ்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சிறையில் இருந்துகொண்டே மாடல் அழகிகள், இளம் நடிகைகளை வரவழைத்து அவர்களுக்குப் பரிசுப் பொருள்களையும், பணத்தையும் வாரி வழங்கியதாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 

சுகேஷ் மிரட்டி சம்பாதித்த பணத்தில் அதிகம் பலனடைந்தவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். ஜாக்குலினை சுகேஷ் காதலிக்கவும் செய்தார் என்று கூறப்படுகிறது. ஜாக்குலினுக்கு மட்டும் 10 கோடி ரூபாய் வரை சுகேஷ் செலவிட்டது அமலாக்கப் துறை விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே ஹோலி பண்டிகையையொட்டி சிறையில் இருந்து கொண்டு ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் கடிதம் எழுதியிருந்தார். அதோடு சுகேஷ் தன்னுடைய பிறந்தநாளுக்கும் ஜாக்குலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், தற்போது ஜாக்குலின் இன்று ஈஸ்டர் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். இந்தப் பண்டிகைக்கும் ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார். 

அதில், "மை பேபி, என் முயல் குட்டி... அடுத்த ஈஸ்டரை இதற்கு முன்பு கொண்டாடிய ஈஸ்டர்களில் மிகவும் சிறந்ததாக மாற்றுவேன். உங்களுக்கு மிகவும் பிடித்த விழாவில் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். இந்த ஆண்டில் இது உங்களுக்கு மிகவும் பிடித்தமான திருவிழா. இதில் உங்களுடன் இல்லாமல் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். நீங்கள் ஈஸ்டருக்கு முட்டையை உடைப்பதை பார்க்காமல் மிஸ் செய்கிறேன்.

என் பேபி நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா. இந்த பூமியில் உன்னைப்போல் அழகானவர்கள் யாரும் இல்லை. மை பேபி, என் முயல் குட்டி உன்னை காதலிக்கிறேன். நான் உன்னைப் பற்றி நினைக்காத நேரமே கிடையாது. உன்னுடைய மிகவும் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்குத்தெரியும்" என்று அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் சுகேஷ். இந்தக் கடிதத்தை சுகேஷின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் வெளியிட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement