தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கி பெரும் வெற்றி கண்டார்.
தற்போது பிரபல நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜயை வைத்து கோட் படத்தை இயக்கி வருகின்றார். இந்த படம் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டிய நிலையில் இதற்கான எடிட்டிங் பணிகளும், டப்பிங் பணிகளும் நடைபெற்று வருவதாக அண்மையில் தெரிவித்து இருந்தார்கள்.
கோட் படத்தில் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள். அது மட்டுமின்றி மறைந்த நடிகர் விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தின் ஊடாக இதில் நடிக்க வைத்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வெங்கட் பிரபு தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். அதன்படி வைகாசி, ஷார் பூத் திரி, கசடதபர, அடியே, விழித்திரு, லாக் அப் உள்ள பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், வெங்கட் பிரபு தனது இளம் வயதில் ஹீரோவாகவும், பிரபல நடிகை சங்கீதா ஹீரோயின் ஆகவும் நடிக்கவிருந்த திரைப்படத்தின் போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!