சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் வெங்கட் பிரபு. அதன்பின்பு சரோஜா, மங்காத்தா என வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்தார்.
அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இறுதியாக கோட் படம் வெளியானது.
இந்த படத்தில் விஜய் இரண்டு கேரக்டரில் நடித்திருந்ததோடு இதில் சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கோட் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியானது. ஆனாலும் ரசிகர்களின் இயக்கத்தை பூர்த்தி செய்யவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். விமர்சன ரீதியாக கடும் ட்ரோலுக்கு உள்ளான கோட் படம் வசூலில் 450 கோடி வரை வசூலித்திருந்தது.
இதை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு பாலிவுட் சினிமாவிலும் நுழையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவருடைய லிஸ்டில் சிவகார்த்திகேயன், அஜித் குமார் ஆகியோரும் உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானன.
இந்த நிலையில், வெங்கட் பிரபு நியூ இயரை கொண்டாடும் வகையில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அவருக்கு ரசிகர்கள் பலரும் நியூ இயர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!