• Apr 16 2026

திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட படங்களின் இந்த வார OTT ரிலீஸ் லிஸ்ட் இதோ..

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

இந்த வாரம் ஓடிடியில் புதுப்படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில் அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னவென்று விரிவாக பார்ப்போம். 

திரையரங்குகளில் வெற்றி பெற்ற சில படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளன. மேலும் சில சூப்பர் ஹிட் வெப் தொடர்களும் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளன. தற்போது  வெப் சீரிஸ்  மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது 

இந்த வார ஓடிடியில் பவான் கல்யாண் நடித்த ஓஜி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படம் அதிரடி, ஆக்சன்  கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது.  இது  எதிர்வரும் அக்டோபர் 23ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும். 


விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சக்தி திருமகன் திரைப்படம் ஜியோ ஹோஸ்டாரில் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படம்  பொலிடிக்கல் திரில்லர்  ஜானரில்  ரிலீஸ் ஆகி, அமோக வரவேற்பு பெற்றது.  இந்த படத்தை அருண்பிரபு இயக்க, விஜய் ஆண்டனி தயாரித்து இருந்தார். 


பிறமொழி படங்களான  ஜான்வி கபூரின் 'பரம் சுந்தரி' பிரைம் வீடியோவில் அக். 24 அன்றும், மலையாளப் படமான 'நடிகர்' லயன்ஸ்கேட் ப்ளேவில் அதே நாளிலும் வெளியாகிறது. 


'பிட்ச் டு கெட் ரிச்' என்ற ஃபேஷன் பிசினஸ் ரியாலிட்டி ஷோ ஜியோ ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிறது. மேலும், மலையாளப் படமான 'சுட்டுலி' மனோரமா மேக்ஸில் அதே நாளில் வெளியாகிறது.


அனிமேஷன் தொடரான 'குருக்ஷேத்ரா: பகுதி 2' நெட்ஃபிளிக்ஸில் அக்டோபர் 24 முதல் ஒளிபரப்பாகிறது. இந்தியாவின் முதல் முழு AI தொழில்நுட்பத்தில் உருவான 'மகாபாரத்: ஏக் தர்மயுத்' தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் அக். 25 அன்றும் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement