மாபெரும் வெற்றியைப் பெற்ற பான் இந்திய திரைப்படமான ‘காந்தாரா சாப்டர் 1’ தற்போது மேலும் ஒரு முக்கிய கட்டத்தைக் கடக்கவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே வெற்றிகரமாக வெளியான இப்படம், தற்போது ஆங்கில மொழி பதிப்பாகவும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் ஆங்கில பதிப்பு அக்டோபர் 31, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம், இந்தியாவின் பழமையான வரலாற்று மற்றும் பாரம்பரியக் கதைகளின் பின்னணியில் அமைந்தது. இப்படம் 2025 அக்டோபர் 2ம் தேதி, திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘காந்தாரா’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே வணிக ரீதியாகவும் சாதனை படைத்தது. பல மாநிலங்களில் டிக்கெட் விற்பனை ஹவுஸ்புல் ஆனது. ஒரே வாரத்தில் 100 கோடிக்கு மேல் வசூலித்ததோடு, உலக அளவில் கலாச்சார சினிமா மீது உள்ள விருப்பத்தையும் புலப்படுத்தியது. இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!