• Nov 12 2025

‘தம்மா’ திரைப்படத்தை வெளியிடுவதற்குத் தடை..! உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘தம்மா’ திரைப்படம் அக்டோபர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் இப்படம் வெளியாகிய அதே நாளில் சட்டவிரோதமாக இணையம் மற்றும் கேபிள் சேனல்களில் வெளியிடப்பட்ட சம்பவம், திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், இப்படத்தின் சட்ட விரோத வெளியீட்டை தடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தலையீடு செய்து, நவம்பர் 14, 2025 வரை ‘தம்மா’ திரைப்படத்தை எந்த விதமாகவும் இணையம் மற்றும் கேபிள் டிவிகளில் வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்துள்ளது.

இப்படம் வந்த நாளிலேயே தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையிலும் இப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக பேசப்பட்டது.

இந்த நிலையில், படத்தினை சட்ட விரோதமாக வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவார்கள் என்பதாலேயே சென்னை உயர்நீதிமன்றம் தற்பொழுது தடை வித்தித்துள்ளது. 

Advertisement

Advertisement