பிரபலமான ஒரு நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என வெவ்வேறு துறைகளில் தன்னை நிலைநிறுத்தியவர் ரிஷப் ஷெட்டி. குறிப்பாக, 'காந்தாரா: Chapter 1' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, இந்தியா மட்டுமல்லாது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. இந்த வெற்றியுடன் ரிஷப் ஷெட்டி இன்று அனைவருக்கும் பரிச்சயமான முகமாக இருக்கிறார்.
ஆனால், நாம் "ரிஷப் ஷெட்டி" என்று அழைக்கும் அவர், தனது வாழ்க்கையின் ஆரம்பகட்டங்களில் அந்தப் பெயரை கொண்டிருந்ததில்லை. அவரது உண்மையான பெயர் "பிரசாந்த் ஷெட்டி" என்பதைக் கூறி, அவர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் பெயர் மாற்றத்திற்குப் பின்னுள்ள உண்மை காரணத்தையும், அந்த நேரத்தில் எதையெல்லாம் சந்தித்தார் என்பதையும் திறமையாக பகிர்ந்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி கூறியதாவது,“எனது பிறப்புப் பெயர் பிரசாந்த் ஷெட்டி. அந்தப் பெயரில் தான் நான் திரையுலகில் காலடி வைத்தேன். ஆனால், நான் அந்த பெயருடன் பயணித்த சில ஆண்டுகளில் எந்த ஒரு நல்ல வாய்ப்புகளும், வெற்றிகளும் என்னை தேடி வரவில்லை. இதனால் தான் ரிஷப் ஷெட்டி என்று பெயரை மாற்றினேன். ” என்றார்.
இந்நிலையில், காந்தாரா சாப்டர்-1 சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் அவரது தாய் மண் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் கலந்துரையாடலை, பாரம்பரிய மக்களின் வாழ்வியல் முறையை பிரதிபலித்தது. படம் வெளியாகி வெற்றி பெற்று விட்டதும், உலகம் முழுவதும் அவரை ஒரே வாரத்தில் "ஸ்டார்" ஆக்கினார்கள்.
Listen News!