ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வசூலை அள்ளி வருகின்றது. ஒட்டுமொத்த விமர்சகர்களும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மக்களும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றார்கள்.
தென்னிந்தியாவில் வெளியான கல்கி, புஷ்பா படங்களை தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தான் முதல் நாளிலேயே டிக்கெட் புக்கிங் சாதனை படைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இந்தப் படத்தை பார்த்துவிட்டு இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு படத்தை பார்க்கவே இல்லை என ரிஷப் ஷெட்டியை பாராட்டியிருந்தார்.
சர்வதேச அளவில் வசூலையும் பாராட்டுக்களையும் காந்தாரா படத்திற்கு குவிந்து வரும் நிலையில், இந்தப் படம் 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் உலக அளவில் 765 கோடிகளை வசூலித்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. காந்தாரா படத்தின் முதலாவது பாகமும் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிகளவான லாபத்தை பெற்றிருந்தது.
காந்தாரா சாப்டர் 1 படத்தை பெரிதாக ப்ரொமோட் செய்யவில்லை. படம் வெளியான பின்பு தானாகவே பிக்கப் ஆகிவிடும் என்று ரிஷப் ஷெட்டி நினைத்துள்ளார். அதன்படியே காந்தாரா படம் முதல் நாளில் மட்டும் 80 கோடிகளை வசூலித்திருந்தது. தற்போது 765 கோடிகளை கடந்த நிலையில் ஆயிரம் கோடி வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
Listen News!