இந்திய சினிமா உலகில் இன்று "நேஷனல் கிரஷ்" என அனைவராலும் அழைக்கப்படுகிறவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் அசத்தலான நடிப்புடன் தன்னுடைய ரசிகர் வட்டத்தை விரிவாக்கிய இவர், சமீபத்தில் காதல் முறிவு (Breakup) குறித்த அவரது அனுபவம் மற்றும் அதைப் பற்றிய கருத்துகளை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில், ராஷ்மிகாவிடம் ஒரு சுவாரசியமான கேள்வி கேட்கப்பட்டது. அதில், "காதல் முறிவால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? ஆண்களா? பெண்களா?" என்று கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு ராஷ்மிகா, "காதல் முறிவால் பெண்களை விட அதிகம் ஆண்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்கள் வலியை வெளிப்படுத்த உங்களைப் போல தாடி வளர்க்கவோ... மது குடிக்கவோ முடியாது.! பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அதை வெளியே காட்ட முடியாது." என்று பதிலளித்துள்ளார். இந்த கூற்று, பெண்களின் வலியை உணர்வுபூர்வமாக பிரதிபலிக்கிறது.
Listen News!