பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா வீட்டுக்கு போன கோபி ராதிகாவிடம் தன்னால் இங்கே இருக்க முடியாது.. ஆனால் உன்னையும் மையூவையும் விட்டு இருக்கவும் முடியாது என்று சொல்லுகிறார்.
இன்னொரு பக்கம் ஈஸ்வரி கோபி போய் நீண்ட நேரம் ஆகிவிட்டது என்று அடிக்கடி வாசலை எட்டி எட்டிப் பார்த்து கொண்டு உள்ளார். மேலும் ராதிகா கோபியை அங்கேயே பிடித்து வைத்து விடுவாரோ என்று முணுமுணுத்துக் கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து கோபி ராதிகாவை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைக்கின்றார். ஆனாலும் நான் பட்ட அவமானம் போதாதா? கடைசி மட்டும் வரமாட்டேன் என்று சொல்ல, ராதிகாவின் கை காலை பிடித்து கெஞ்சுகின்றார் கோபி. இதனால் ராதிகாவும் சம்மதிக்கின்றார்.
அதன்பின்பு வீட்டுக்கு வந்த கோபி, நீங்க சொன்ன மாதிரியே வந்துட்டேன் என்று ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு கூடவே ராதிகா, மையூவையும் கூட்டி வருகின்றார். மேலும் நான் இருக்க மட்டும் இவங்களும் என்னுடன் இங்கே தான் இருப்பாங்க என்று சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சி அடைகின்றார்.
ஆனாலும் தனக்கு நெஞ்சு வலி வந்தது போல் நடித்து ராதிகாவையும் மையூவையும் வீட்டுக்குள் சேர்க்கின்றார் கோபி. இதன் போது பாக்யா எதுவும் சொல்லாமல் நிற்கிறார்.
இறுதியில் கோபி நெஞ்சுவலி போல் வந்தது போல் நடிக்கவும், நான் இனி எதுவும் கேட்க மாட்டேன் என்று ஈஸ்வரி உண்மையிலேயே நம்பி விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!