பிக்பாஸ் சீசன் 8ல் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வைக்கப்பட்டு விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது. இதனால் போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் பிக்பாஸ் ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. அது என்னெவன்று விரிவாக பார்ப்போம்.
அதன்படி, இன்று அதிகாலையிலேயே ரொம்ப நாள் வைக்கப்படாமல் இருந்த மோர்னிங் ஆக்டிவிட்டீஸ் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு மூன்று பாயிண்ட்களை எடுக்க வேண்டும்.
ஆனால் அதற்கு முதல் பிக்பாஸ் கொடுத்த ஒரு நிமிசத்தில் அந்த மூன்று பாயிண்டும் எதற்காக எமக்கு வேண்டும் என்பதையும் போட்டியாளர்கள் விபரிக்க வேண்டும் . இது தான் ஹவுஸ்மேட்ஸ்க்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்.
இறுதியில் 10 போட்டியாளர்களில் யார் பெஸ்ட்டா பேசினாங்க என்று பிக்பாஸ் கேட்கவும், எல்லாரும் மஞ்சரிக்கு வாக்கு அளிக்கின்றார்கள். இதனால் மஞ்சரிக்கு சிறந்த பேச்சாளர் பட்டம் கிடைக்கிறது.
அதன்பின் இது சாதாரண டாஸ்க் என்று நினைத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு பிக்பாஸ் செம ட்விஸ்ட் கொடுக்கிறார். அதாவது மஞ்சரிக்கு மூன்று பாயிண்ட் கிடைத்தோடு, இது டிக்கெட் டூ ஃபினாலேக்கு வைக்கப்பட்ட டாஸ்க் என்றும் சொல்லுகிறார் பிக்பாஸ் .
மேலும் இந்த டாஸ்கில் மஞ்சரிக்கு நான்கு பாயிண்ட் கிடைத்து உள்ளது. அவருடன் ராயன், சௌந்தர்யாவுக்கும் நான்கு பாயிண்ட் உள்ளன . மேலும் முதல் இடத்தில் விஷால் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!