• May 03 2024

வாரிசு படத்தின் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் -குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில்  வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப் படத்தில் நடிகர் ஷாம், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளன.


சமீபத்தில் நடிகர் சிம்பு பாடி வெளியான "தீ தளபதி" பாடல் இணையத்தில் வைரலாகி ட்ரண்ட் ஆனது.

மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராம், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வாரிசு படத்தின் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதில் அவர், "வாரிசு படத்தின் அடுத்து பெரிய ஈவென்ட் ஆடியோ லான்ச் ஆக இருக்கும்.அத்தோடு  வரும் டிசம்பர் 24 கிறிஸ்துமஸ் முன்பு வெளியாகும்" என கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement