சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் தான் வனிதா விஜயகுமார். பின்னர் திருமண பந்தத்தில் இணைந்ததால் நடிப்பிலிருந்து விலகினார்.திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சர்ச்சை, பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சினை போன்ற காரணங்களால் தன்னுடைய பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
மேலும் இவர் பிகக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலமே ரசிகர்களிடம் மிகவும் பிரபல்யமானார்.தொடர்ந்து குக்வித் கோமாளி ஷோவிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.இதன் பின்னர் சில ரியாலிட்ரி ஷோக்களில் பற்குபற்றி வந்த இவர்,தற்பொழுது திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
தனியாக யூடியூப் சேனலையும் நடத்தி வரும் இவர் இதன் மூலம் ரசிகர்களுக்கு பல டிப்ஸ்களை சொல்லியும் வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.
வனிதாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் ஜோவிதா அண்மையில் தனது 18வது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது அவரை ஹீரோயின் ஆக்க வனிதா முடிவெடுத்து கதைகள் கேட்டு வருகிறாராம்.ஹீரோ யார் என்பதை படம் உறுதியான பின் அறிவிப்பதாக வனிதா கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!