• Jan 19 2025

வனிதா விஜயகுமாரின் மகனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்.. இன்னொரு வாரிசுகள் ஜோடி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய்ஸ்ரீ ஹரி, பிரபல இயக்குனரின் மகளுடன் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய்ஸ்ரீ ஹரி என்பவர் விரைவில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் அறிமுகமாகும் திரைப்படத்தில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஹஷேல் ஷைனி என்பவர் நடிகையாக அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் நிலையில் ஷைனி, தற்போது நடிகையாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அவரது தந்தை பிரபு சாலமன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடு சென்று விசேஷ பயிற்சி எடுத்துக் கொண்டு வந்துள்ள விஜய்ஸ்ரீ ஹரிக்கு அவரது அப்பா ஆகாஷ் தான் தனது வழிகாட்டி என்று கூறப்படுகிறது. தற்போது 25 வயதாகும் விஜய்ஸ்ரீ ஹரி, சின்ன வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டு இருந்ததாகவும் இதுதான் சினிமாவில் நுழைய சரியான நேரம் என்பதை அடுத்து அவருடைய அப்பா தற்போது சினிமாவில் அவரை நடிக்கவைக்க முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.



கடந்த சில வருடங்களாகவே விஜய்ஸ்ரீ ஹரிக்கு  சினிமா வாய்ப்புகள் வந்த போதிலும் பெரிய பேனர் அல்லது முன்னணி இயக்குனர் மூலம் தான் அறிமுகமாக வேண்டும் என்று ஆகாஷ் நினைத்ததாகவும் அது தற்போது கைகூடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இயக்குனர் பிரபு சாலமன் ஒரு கதைக்காக புதுமுகம் ஒன்றை தேடிக் கொண்டிருப்பதை ஆகாஷ் கேள்விப்பட்டதாகவும், இதையடுத்து விஜய்ஸ்ரீ ஹர உடன் அவரை அணுகியபோது நான் கதைக்கு பொருத்தமாக விஜய்ஸ்ரீ ஹரி சரியாக இருப்பார் என்பதை அடுத்து உடனடியாக அவரை ஹீரோவாக பிரபு சாலமன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் தனது மகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இரு பிரபலங்களின் நட்சத்திர வாரிசுகள் இந்த படத்தில் இணையவுள்ளனர். கிட்டத்தட்ட இந்த படம் ’கும்கி’ ஸ்டைலில் தான் இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் யானைக்கு பதிலாக சிங்கம் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இடம் பெற இருப்பதாகவும், இதற்காக சிங்கத்திற்கும் விஜய்ஸ்ரீ ஹரிக்கும்  இடையே சில பயிற்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement