• Jan 19 2025

சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட தங்கமயில்.. மீனா கண்டுபிடித்த உண்மை..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் மற்றும் மீனா சென்னை செல்வது குறித்து கோமதி, பாண்டியனிடம் பேச பாண்டியனும் கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிடுகிறார். இந்த நிலையில் தான் திடீரென பாத்திரம் உருளும் சத்தம் கேட்டவுடன் இருவரும் திடுக்கிட, அப்போது பழனி ஓடிவந்து வீட்டுக்குள் திருடன் புகுந்து விட்டான் என்று சத்தம் போடுகிறார். செந்தில், கதிர், சரவணன் ஆகியோர்களின் அறையை தட்டி எழுப்பி அவர் பதட்டம் அடைய ,பாண்டியன் ’எதற்காக இப்படி பதட்டம் அடைகிறாய் கொஞ்சம் அமைதியாக இரு’ என்று கூறுகிறார்.

வீட்டிற்குள் திருடன் புகுந்ததை நான் மொட்டை மாடியில் இருந்து பார்த்தேன், என்னை பார்த்ததும் திருடன் மறைத்துக் கொண்டான் என்று கூற சரவணன், செந்தில், கதிர் ஆகியோர் திருடனை தேடுகின்றனர், ஆனால் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய நகைகளை எல்லாம் பாதுகாப்பாக லாக்கரில் வைத்து விடலாம் என்று சரவணன் இடம் தங்கமயில் கூற, அதை சரவணன் காது கொடுத்து கேட்கவில்லை, நம்முடைய முதல் இரவு தினமும் வேஸ்ட் ஆகிக்கொண்டே இருக்கிறது என்று கூறுகிறார்.



இந்த நிலையில் மறுநாள் காலை திருடன் குறித்து வீட்டில் உள்ள அனைவரும் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது தங்கமயில் ’நம்முடைய நகைகளை எல்லாம் லாக்கரில் வைத்து விடுவோம்’ என்று கூற மீனாவும் ’நானும் இதைத்தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், லாக்கரில் வைத்து விடலாம்’ என்று கூற அப்போது பாண்டியன் கோமதியுடன் ’உன்னுடைய லாக்கரில் எல்லா நகைகளையும் வைத்து விடு’ என்று கூறியவுடன் தங்கமயில் அதிர்ச்சி அடைகிறார். என்னுடைய அம்மாவுக்கு ஒரு லாக்கர் இருக்கிறது, என்னுடைய நகைகளை அந்த லாக்கரில் வைத்துவிடலாம்’ என்று கூறுகிறார்.

அப்போது பழனி ’லாக்கரில் நகைகளை வைப்பது வேஸ்ட், நகைகளை லாக்கரில் வைப்பதற்கு நாம் தான் காசு கொடுக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக நகைகளை வங்கியில் அடகு வைத்தால், நமக்கு காசு கிடைக்கும், அதை வைத்து நாம் பிசினஸ் செய்து கொள்ளலாம் அல்லது ஏதாவது இடம் வாங்கி வைத்துக் கொள்ளலாம்’ என்று கூற அந்த யோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது என்ற எல்லாரும் கூறுகின்றனர்.

அப்போதுதான் தங்கமயில் மீண்டும் அதிர்ச்சி அடைகிறார். கவரிங் நகைகளை லாக்கரில் வைக்க எடுத்துச் சென்றால் தனக்கு பிரச்சினையாகுமே என்று அவர் திண்டாட்டத்தில் இருப்பதை மீனா கவனித்து விடுகிறார். நகை குறித்து ஏதோ பிரச்சனை தங்கமயிலிடம் இருக்கிறது என்பதை மீனா கண்டுபிடித்து விட்ட நிலையில் லாக்கர் ஐடியாவை கொடுத்து சொந்தக்காசில் தங்கமயில்  சூனியம் வைத்துக் கொண்ட நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement