• May 18 2024

பிகில் நாயகிக்கு அடித்த லோற்றிடிக்கட்... தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் வைபவின் தங்கை...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் 2017ல் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் வைபவின் தங்கையாக நடித்து அறிமுகமானார். அவரின் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை அவரது நடிப்பினால் பெற்றார். அதன்பிறகு, மெர்குரி என்னும் விழிப்புணர்வு படத்தில் நடித்தார்.


இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா என பலர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் பிகில். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை இந்துஜா. விஜயை எதிர்த்து பேசும் பலமான கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். 


பிகில் படத்தை தொடர்ந்து, தனுஷின் நானே வருவேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை இந்துஜா. தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வரும் இந்த நடிகைக்கு தெலுங்கு சினிமாவில் என்ட்ரி ஆக சூப்பரான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த தெலுங்கு படத்திற்கு தெலுங்கு மக்கள் மத்தியில் எக்கச்சக்கஎதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு மிக்க படத்தில்தான் நடிக்கிறார் இந்துஜா.


இயக்குனர் கோபிசந்த் இயக்க முன்னணி நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின்மூலம் நான்காவது முறையாக இயக்குனர் கோபிசந்த் மற்றும் ரவி தேஜா இணைந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடபடாத நிலையில், இயக்குனர் மற்றும் ஹீரோவின் நான்காவது கூட்டணி என்பதால் RT4GM என கூறிவருகிறார்கள்.


இப்படிப்பட்ட ஒரு முக்கிய படத்தில்தான் இணைந்திருக்கிறார் நடிகை இந்துஜா. முன்னதாக, இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் இந்த படத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தார்.


அவரை தொடர்ந்து இந்துஜா இந்த படத்தில் இணைந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். மிகவும் எதிர்பார்ப்போடு உருவாகும் இந்த படத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த இருவர் அறிமுகமாவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் போல இருக்கிறது.

Advertisement

Advertisement