• May 28 2024

அடேங்கப்பா..ரிலீஸுக்கு முன்பே ஜெயிலர் செய்த வசூல் சாதனை இத்தனை கோடியா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்து வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது. ஆம், நேற்று வரை ப்ரீ புக்கிங்கில் உலகளவில் ரூ. 12 கோடி வரை ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்திருந்தது.

ஆனால், தற்போது முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 35 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம் கொண்டாடி வருகிறார்கள்.

ப்ரீ புக்கிங்கிலேயே இத்தனை கோடி வசூல் செய்துள்ள ஜெயிலர் கண்டிப்பாக முதல் நாள் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement