• Jan 19 2025

ஆரத்தி கரைக்க தெரியாத மீனா - ராஜி.. உதவி செய்த எதிர்வீட்டு அப்பத்தா.. மீண்டும் பிரச்சனையா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நேற்றைய எபிசோடின் முடிவில் ஆரத்தி கரைப்பதற்காக முன்கூட்டியே கதிர், ராஜி மற்றும் மீனா வீட்டுக்கு செல்கின்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று அவர்கள் காரில் செல்லும்போது சில ரொமான்ஸ் காட்சிகள் நடப்பதும் அப்போது மீனா கேலி செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதனை அடுத்து தங்கமயில் தனது அம்மா அப்பாவிடம் அழுகையுடன் விடை பெற்றுக் கொண்டு தனது கணவர் சரவணனுடன் காரில் ஏறி வீட்டுக்கு செல்லும் காட்சிகள் உள்ளன. அதன் பின்னர் காரில் சென்று கொண்டு இருக்கும் போது கூட தங்கமயில் அழுது கொண்டிருக்கும் போது சரவணன் அவரை தனது தோளில் சாய்த்து வைத்து கொண்டு ஆறுதல் கூறுகிறார்.

இந்த நிலையில் வீட்டிற்கு ஆரத்தி கரைக்க வரும் மீனா, ராஜி ஆகிய இருவரும் வருபவர்களுக்கு கொடுப்பதற்காக லெமன் ஜூஸ் போடுகின்றனர். அதன் பிறகு ஆரத்தி கரைக்கலாம் என்று முடிவு செய்தபோது ஆரத்தி எப்படி கரைப்பது என்று ராஜிக்கு தெரியவில்லை. அவர் மீனாவிடம் போய் கேட்க, எனக்கும் தெரியாது என்று கூறுகிறார். உடனே கூகுளில் பார்ப்போமா என்று மீனா ஐடியா கொடுக்க அதற்கு ராஜி நம்ம போன் எல்லாம் சித்தப்பாவிடம் இருக்கிறது என்று கூறுகிறார்.



இதனை அடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கேட்போம் என மீனா ஐடியா கொடுக்கும்போது தான் எதிர்வீட்டு அப்பத்தா வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டு வெத்தலை போடுகிறார். உடனே மீனாவுக்கு அப்பத்தாவிடம் கேட்டு விடுவோம் என்று யோசனை தோன்றுகிறது. ஆனால் ராஜி வேண்டாம் என்று தடுக்கிறார். ஏதாவது பிரச்சனை ஆகிவிடும், என் அப்பா அல்லது சித்தப்பா பார்த்தால் விபரீதம் ஆகிவிடும் என்று சொல்ல, நீ கேட்க வேண்டாம் நான் கேட்கிறேன் வா என்று கூறி அப்பத்தாவிடம் கூட்டிப் போகிறார்.

அப்போது அப்பத்தா அவர்கள் இருவரையும் கிண்டலாக பார்க்க, எங்கள் வீட்டில் கல்யாணம் நடந்திருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்தில் பெண் வந்து விடுவார் என்று கூற, என்ன நீயும் உன் மாமனார் போல் பெருமை பேச வந்திருக்கியா என்று கூற, இல்ல ஆரத்தி கரைக்க வேண்டும் எப்படி கரைப்பது என்று எனக்கு தெரியாது என்று கூறுகிறார்.

என்னமோ கவர்மெண்ட்ல வேலை பாக்குறேன்னு சொன்னாங்க, ஆரத்தி கூட கரைக்க தெரியாதா என்று அப்பத்தா கேலியாக கேட்க, எங்க ஆபீஸ்ல அதெல்லாம் சொல்லித் தரவில்லை என்று மீனாவும் கேலியாக கூறுகிறார். இதனை அடுத்து அப்பத்தா சிரித்துக் கொண்டே ஆரத்தி எப்படி கரைக்க வேண்டும் என்று கூறுவதோடு ஆரத்தி கரைக்க வெற்றிலை, சுண்ணாம்பும் தருகிறார். நல்ல வேலையாக ராஜியின் வீட்டில் யாரும் இந்த காட்சியை பார்க்கவில்லை.

இதனை அடுத்து சரவணன் - தங்கமயில் வீட்டுக்கு வரும்போது மீனா, ராஜி, குழலி ஆகிய மூவரும் சேர்ந்து ஆரத்தி எடுக்கின்றனர். அதன் பின்னர் புது மணமக்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள், பால்பழம் கொடுக்கும் காட்சிகள் ஆகியவை உள்ளன. அதன் பின்னர் தங்கமயில் வீட்டில் விளக்கு ஏற்றுவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைந்துள்ளது. நாளைய எபிசோட்டில் தனது மகள் தங்க மயிலுக்கு போன் செய்யும் பாக்கியம், மாமனார் மாமியாரை கைக்குள் போட்டுக் கொள், மாப்பிள்ளையை கைக்குள் போட்டுக் கொள், அந்த வீட்டில் உள்ள எல்லாம் உன் கைக்குள் வரவேண்டும்’ என்று தவறாக ஆலோசனை கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.


Advertisement

Advertisement