• Oct 16 2024

அங்காடித் தெரு திரைப்பட நடிகை சிந்து திடீர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் அங்காடித் தெரு. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து. இதையடுத்து சினிமாவிலும், சீரியலிலும் நடித்து வந்த சிந்து, கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்து வருபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். 

மேலும் இவர்  நாடோடிகள், தெனாவெட்டு, கருப்பசாமி குத்தகைதாரர், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.


மேலும் கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவருக்கு ஒரு பக்க மார்பகம் எடுக்கப்பட்டது.இதனால் அவரால் 10 முதல் 20 நிமிடங்கள் வரைகூட தொடர்ந்து உட்கார முடியாத நிலை ஏற்பட்டு, இரவு நேரத்தில் படுக்க முடியாதவாறு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

 இந்நிலையில் அவரின் இன்னொரு மார்பகத்திலும் புற்றுநோய் பரவிவிட்டது. தான் மருத்துவ செலவுக்குக் கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமம் பட்டு வருவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.இந்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகை சிந்து கடந்த சில நாட்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகை சிந்து மரணமடைந்துள்ளார். 42 வயதாகும் நடிகை சிந்துவின் மரண செய்தியை கேட்டு திரையுலகில் உள்ள பலரும் அதியடைந்துள்ளனர்.அத்தோடு தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement