• Jan 18 2025

எந்த சூழ்நிலையிலும் ஜெனிய இவன் கூட வாழ சொல்ல மாட்டன்; அவ பக்கம் தான் நிப்பன்! உங்க இஷ்டத்துக்கு எல்லாம் அட முடியாது! பாக்கியா அதிரடி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அதன்படி, இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கவுள்ளது என பார்ப்போம்.

ஜெனி வீட்டிற்கு போய்ட்டு வருவோம் என ஈஸ்வரி பாக்கியாவ கேக்க, எப்படி அத்த போறது நான் வரல என்று மறுக்க இறுதியில் கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறார் ஈஸ்வரி.

இதை தொடர்ந்து, ஜெனி வீட்டிற்கு பாக்கியாவும் ஈஸ்வரியும் செல்கின்றனர். அங்கு சென்ற ஈஸ்வரி ஜெனியின் அம்மாவிடம் ' குழந்த எங்க நான் பாக்கணும்' என கேக்க, நீங்க குழந்தைய ஜெனிய பாத்துக்கிட்டது  எல்லாம் போதும் என சொல்ல அவருடன் வாக்குவாதம் செய்கிறார் ஈஸ்வரி. 


அதன்பின் ஜெனி வர, என்ன உங்க அம்மா இப்படி எல்லாம் கதைக்கிறா? நீ பாத்துட்டு அமைதியா இருக்க.. என ஈஸ்வரி சொல்ல, ஜெனி நடந்தத எல்லாம் உன்கிட்ட சொல்லுறதுக்கு நல்ல விஷயம் இல்ல என பாக்கியா சொல்ல, இப்ப நான் என்ன பண்ணனும்? எல்லாத்தையும் மறந்து உங்க வீட்ட வரணுமா? உங்க பொண்ணு இனியாவுக்கு இப்படி நடந்தா என்ன பண்ணி இருப்பிங்க என்று ஜெனி கேக்க, பதில் ஒன்றும் சொல்ல  முடியத நிலையில் வாங்க அத்த போவம் என்று ஈஸ்வரியை அழைத்து செல்கிறார் பாக்கியா.

மற்றொரு பக்கம் ஜெனி வந்துடுவாளா என கோபியுடன் புலம்பிக் கொண்டு இருக்கிறார் செழியன். பின் ஈஸ்வரி அங்கு வந்ததும் ஜெனி வந்தாளா? என கேக்க, நடந்தவற்றை சொல்லி எனக்கு கோவம் எல்லாம் அந்த பாக்கியா மேல தான் என மீண்டும் அவர் மீது பழியை போடுகிறார்.


இதையடுத்து பாக்கியாவுக்கு கோவம் வரவும், நானும் பாத்துட்டு தான் இருக்கன் எல்லாம் ஓவரா தான் போறீங்க என எல்லாரையும் விளாசி தள்ளி விட்டார். அத்துடன், செழியனுக்கும் பேசுகிறார். ஜெனி இருந்தப்போ அவள்ட அருமை புரியல..இப்ப அனுபவி..தப்பு மேல தப்பு பண்ணினான் தானே அனுபவிக்கட்டும்.. ஜெனி என்ன முடிவு எடுத்தாலும் அவ கூட தான் நிப்பன்.நீ என் பிள்ளையே இல்ல. உன்ன நெனைச்சா அசிங்கமா இருக்கு என்று சொல்லி நகர்கிறார்.


இன்னொரு பக்கம், நிலாவின் குழந்தையை போட்டோவில் பார்த்து கொஞ்சிக் கொண்டு இருக்கிறார் கணேஷ். இன்னும் ஒரு மாசத்துல நான் என் குடும்பத்தோட சேர்ந்துடுவன் என சந்தோசமாக இருக்கிறார்.

அடுத்து, பேங்க்ல வாங்கின லோனுக்கு வட்டி கட்ட  தனது வளையலை கொடுத்து அடகு வைத்து காசு தருமாறு செல்வியிடம் சொல்கிறார் பாக்கியா.

Advertisement

Advertisement