• May 05 2024

நம்பவே முடியாத நிலையில் 'கரகாட்டக்காரன்' கனகா! அவரை நேரில் சந்தித்த பிரபலம் யார் தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

1973 இல் நடிகை தேவிகா வுக்கும் இயக்குனர் தேவதாஸ் அவர்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தது இந்த குழந்தைகளில் ஒன்றாக பிறந்தவர் தான் கனகா இவருடன் பிறந்த இன்னொரு குழந்தை அப்போவே இறந்து விட்டது. இவங்க சினிமாவுக்கு வந்ததன் பிறகு தான் இவங்க சின்ன வயதிலேயே பல பிரச்சனைகளை தந்தையால் தான் அனுபவிச்சாங்க என்று சொல்லலாம். கனகா மீது இவருடைய தந்தை பல குற்றச்சாட்டுக்களை சொல்லிக்கிட்டே இருப்பாராம் .

இவர் பிறந்த கொஞ்ச நாளிலேயே இவருடைய அப்பாவும் பிரிஞ்சிட்டாரு அம்மாவுடைய அரவணைப்பில் தான் வளர்ந்தாரு பள்ளி படிப்பு படிக்கும்போதெல்லாம் யார் கூடவும் பேச மாட்டாங்களாம் தனியாகவே இருப்பார்களாம். இதனை பார்த்து அவருடைய அம்மா மிகவும் வேதனைப்படுவாராம். ஆறாம் வகுப்பு வரைக்கும் தான் படிச்சிருக்காங்க அம்மாவின் விருப்பத்திற்கு இணங்க படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு நடிப்பில் ரொம்பவே ஆர்வம் காட்டினாங்க 1989இல் கரகாட்டக்காரன் வந்துச்சு இந்த படத்தில் கங்கை அமரன் இவரை ஒப்பந்தம் செய்தார் அப்பொழுது கனவாகவிற்கு 16 வயது.


இந்தப் படத்தில் நடிக்கவே கூடாது என அவருடைய தந்தை ரொம்பவும் பிரச்சனை பண்ணி இருக்காரு இப்படியான பிரச்சனைகளை சிறுவயதிலேயே கனகா சந்தித்தார் இந்த படம் வெளிவந்து பயங்கர ஹிட் ஆனது இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் அதிசய பிறவி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஏராளமான வெற்றி படங்களில் நடித்தார் 2002இல் இவருடைய தாயார் காலமானார். இதன் பின்னர் தனக்கென யாரும் இல்லை என்று தனிமையிலே வாழ ஆரம்பிச்சிட்டாங்க யாரைப் பார்த்தாலும் அவங்களுக்கு பேசவே பிடிக்காதா தனி மரமாகவே நின்னாங்க என்றே சொல்லலாம். அம்மாவின் நினைப்பாகவே இருக்கு என சொல்லி சினிமாவில் இருந்து விலகி தன்னைத்தானே தனிமைப்படுத்தி விட்டார் ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ளவராம்.


இந்த நிலையில், 'கரகாட்டக்காரன்' பட நடிகை கனகா பல வருடங்களாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில், நடிகை குட்டி பத்மினி அவரை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


அதேவேளை, நடிகை கனகா முழுமையாக திரையுலகில் இருந்து விலக காரணம், காதல் தோல்வி, மற்றும் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் சொத்து பிரச்னையும் கனகாவுக்கு இருந்தது என கூறப்படுகிறது. 

இதேவேள, இதன் காரணமாகவே  பல வருடங்களாக முறையான பராமரிப்பு கிடைக்காமல் பாழடைந்த வீடு போல் இருக்கும் வீட்டில் அவர் வசித்து வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement