• Jan 19 2025

2 பிரபல நடிகைகள் கைது செய்யப்படுகிறார்களா? போலீஸ் சுற்றி வளைத்ததால் பரபரப்பு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஒரு விருந்தில் சட்டவிரோதமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதை அடுத்து இரண்டு நடிகைகள் உள்பட சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சமீபத்தில் ஒரு விருந்து நடந்ததாகவும் இந்த விருந்தில் நடிகர் நடிகையர், ஐடி ஊழியர்கள், மாடல் அழகிகள், தொழில் அதிபர்கள் உட்பட 100 பேருக்கு மேல் கலந்து கொண்டதாக தெரிகிறது.

இந்த விருந்தில் அறுசுவை உணவுடன் சட்டவிரோத பொருள் பயன்படுத்தப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பண்ணை வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் சட்டவிரோத பொருள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விருந்து நடத்திய ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.



மேலும் இந்த விருந்தில் கலந்து கொண்ட நடிகை ஹேமா மற்றும் ஆஷா ராய் ஆகிய இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் இந்த சம்மனில் ஆஜராகும் போது அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி அதன் பின் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் நடிகைகள் ஹேமா மற்றும் ஆஷா ராய் இது குறித்து கூறிய போது அந்த விருந்தில் கலந்து கொண்டது உண்மைதான், ஆனால் சட்டவிரோத பொருள் பயன்படுத்தியது பற்றி தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement