தமிழ் சின்னத்திரையான சன் டிவியில் பலரின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றான எதிர்நீச்சல், மறுஒளிபரப்பிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வழக்கமாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர், மறுநாள் காலை 11 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. நேற்றைய எபிஸோட்தான் மறுநாள் காலையில் மறுஒளிபரப்பாகும். இந்த மறுஒளிபரப்பிலும் எதிர்நீச்சல் தொடர் நல்ல டிஆர்பியை அள்ளி வருகிறது.
எனினும், இந்தத் தொடரில் வரும் அனைத்து பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாக நினைவில் நிற்குமளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், எதிர்நீச்சல் தொடரில் பெரும்பாலான பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர் எடுக்கப்படுவதாலும் அந்த பாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் பதியுமளவு அழுத்தமாக இருப்பதாலும் இந்தத் தொடர் மறுஒளிபரப்பிலும் ரசிகர்களைக் கவர்கிறது.
எதிர்நீச்சல் தொடர் டிஆர்பி பட்டியலில் (11.45 புள்ளிகள்) முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் டிஆர்பி பட்டியலில் முதன்மை இடத்தைப் பெறுவது இதுவே முதல்முறை.
இதேபோன்று மறுஒளிபரப்பிலும் டிஆர்பி பட்டியலில் (1.82 புள்ளிகள்) எதிர்நீச்சல் தொடர் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!