• May 06 2024

அழகிப் பட்டம் வென்ற த்ரிஷா... அதுவும் நடிக்க வருவதற்கு முன்னர்... ஆச்சரியத்தில் மூழ்கிப் போன ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி வகிக்கின்ற பெண் நட்சத்திரங்களில் எப்போதுமே டாப்பில் உள்ள ஒருவர் என்ற அந்தஸ்தைக் கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா.

இவர் 1999-ஆம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் நடித்த 'ஜோடி' என்ற திரைப்படத்தின் வாயிலாக துணை நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர்.


அதனைத் தொடர்ந்து 2002-ஆம் ஆண்டு வெளியான 'மௌனம் பேசியதே' என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையால் த்ரிஷாவின் சினிமா பயணம் ஓஹோ என்ற அளவிற்கு சூப்பராக வளரத் தொடங்கியது. 


அந்தவகையில் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார். இவ்வாறாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்ற த்ரிஷா நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன்' என்ற பிரம்மாண்ட படமானது வெளியாக இருக்கின்றது. இதற்காக ரசிகர்கள் வெயிட்டிங். மேலும் இப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது த்ரிஷாவின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் 1999-ஆம் ஆண்டு 'மிஸ் சென்னை' என்ற அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். இதனை சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி கூடக் கூறியிருந்தார்.


இதனைத் தொடர்ந்து சென்னை அழகி பட்டம் வென்றபோது இவர் எடுத்த புகைப்படம் ஆனது தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இப்புகைப்படத்தில் அவர் ரொம்பவே அழகாக இருக்கின்றார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement