மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று இப் படத்தின் இசையமைப்பு விழா இடம்பெற்று வருகின்றது. இந்த விழாவிற்கு படக்குழுவினர் கலந்து சிறப்பித்துள்ளனர். அதில் நடிகை திரிஷா படம் குறித்து ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் “நான் கமல் சாருடனும் நான்கு படங்கள் பணியாற்றி இருக்கிறேன்; மணிசாரடனும் நான்கு படங்கள் பணியாற்றி இருக்கிறேன். Dreams really do come true எல்லோரும் விண்ணைத்தாண்டி வருவாயா பிறகு சிம்புவுடன் மீண்டும் எப்போது பணியாற்றுவீர்கள் என கேட்டார்கள். இந்த படத்தின் டிரைலர் பார்த்த பிறகு பலருக்கும் கேள்விகள் எழுந்திருக்கிறது. நான் யாருக்கு ஜோடி என்று இப்போது நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான் நீங்கள் படத்தின் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே பார்த்திருக்கிறீர்கள். படத்தை முழுமையாக பார்த்தபின் உங்களுக்கே புரியும்" என குறிப்பிடுள்ளார்.
Listen News!