• May 25 2025

தெருச்சண்டையா மாத்தாம..நாகரீகமாக செய்திருக்கலாம்..! ரவி-ஆர்த்திக்குப் பதிலளித்த கஸ்தூரி!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பிய விவகாரம், நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தொடர்புடைய விவாகரத்து விவகாரமே. தொடக்கத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான சில மிரட்டல் பதிவுகள், அதன் பின் சட்டபூர்வமாக கோர்ட்டில் அளிக்கப்பட்ட மனுக்கள், அதனைத் தொடர்ந்து இருவரும் பகிர்ந்த உணர்ச்சிமிகு கருத்துக்கள் என, இந்த விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கின்றது.


இந்நிலையில், நடிகை கஸ்தூரி சமீபத்திய ஒரு நேர்காணலில் கலந்துகொண்டு, இந்த விவகாரத்தில் தன்னுடைய கருத்தைத் தைரியமாகவும் நேர்மையாகவும் தெரிவித்துள்ளார். எப்போதும் சமூக விவகாரங்களில் தைரியமாக குரல் கொடுப்பதில் தன்னை உறுதியாக நிலைநிறுத்தியவர் தான் கஸ்தூரி.


அத்தகைய நடிகை நேர்காணலின் போது,"இவர்கள் இருவரும் தான் இந்தப் பிரச்சனையை பேசப்படும் விஷயமா மாற்றினாங்க. அதுவரை யாருக்கும் தெரியாம இருந்த பிரச்சனை, ஆர்த்தி வெளியிட்ட அந்த அறிக்கையால தான் வெளியே வந்தது. அதுக்குப் பிறகு தான் ரவியும் பதிலளிக்க ஆரம்பிச்சார். அதே நேரத்தில் யார் வீட்டில தான் பிரச்சனை இல்ல? எல்லா கணவன்–மனைவிக்குள்ளயும் பிரச்சனைகள் இருக்கும். ஆனால் அதை வெளியில் கொண்டுவராம, சட்ட ரீதியாகவே முடிக்கலாம்." என்கிறார் கஸ்தூரி.

அதுமட்டுமல்லாது இந்தப் பிரச்சனையை தெருச்சண்டை மாதிரி மாத்திட்டாங்க எனவும் குறிப்பிட்டார். கஸ்தூரியின் இந்தக் கருத்து, தற்போது சினிமாத் துறையில் முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது. அத்துடன், தன்னுடைய வீட்டுப் பிரச்சனையை சமூக வலைத்தளங்களில் கொண்டு வந்து, பலரும் புன்சிரிப்புடன் பார்க்கும் பரிதாப நிலையை ஏற்படுத்துவதாகவும், அதனால் அந்தப் பிரச்சனை தீர்வை பெறுவதற்குப் பதிலாக மேலும் பரவலாகும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் விமர்சித்தார்.


"வீட்டு பிரச்சனையை வெளியே கொண்டு வந்து யாருக்கும் பயனில்லை. அதுவும் பெண்கள் சம்பந்தமாக விமர்சிக்கிறதும், அவங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரங்குக்குள் கொண்டு வந்து பேசுறதும் அசிங்கமானது. அந்தப் பெண்கள் எந்த மனநிலையில் இருக்கிறாங்க என்பதை யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க," என்று கூறிய கஸ்தூரி, சமூக வலைத்தளங்கள் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் “இப்போதாவது ரவியும் ஆர்த்தியும் சிந்திக்கணும்..!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement