• May 04 2024

பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் மிகவும் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுக்கு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்

இவர்களுடன் படக்குழுவினர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.இவர்களை தவிர  நடிகர் சித்தார்த், அதிதிராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி நடைபெறுகிறது. 


கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். கமலின் கம்பீரக் குரலில் வெளியாகி உள்ள இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்ரெய்லரில் வரும் பிரம்மாண்ட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement