• May 08 2024

பிக் பாஸில் மொத்தமாக 76 நாட்கள்.. கூல் சுரேஷ் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆரம்பத்தில் மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 77 நாட்களைக் கடந்து  ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் கூல் சுரேஷ். 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் நாயகனாக கொண்டாடப்படுபவர். இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை இருப்பினும் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் தனது நகைச்சுவையான வசனங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக அறியப்படுகிறார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கூல் சுரேஷ் தனது நகைச்சுவை மூலம் சக போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்ததோடு, தானும் வைக்கப்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி வந்தார்.

எனினும், கடந்த வாரம் கூல் சுரேஷ்க்கு தனது வீட்டின் நினைவு வரவே பிக் பாஸ் வீட்டின் சுவர் ஏறி வெளிய செல்லத் துணித்துள்ளார்.

இதை தொடர்ந்து இந்த வாரம் அவரின் விருப்பப் படியே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.


இந்த நிலையில்,  அவர் இந்த நிகழ்ச்சியில் இதுவரை பங்கு கொண்டதற்கான சம்பள விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, அவர் சுமார் 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது வெளியேறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாரத்திற்கு 1.5 லட்சம் வீதம் சுமார் 15 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement