• Jan 19 2025

'விடாமுயற்சி' படக்குழுவுக்கு நடிகர் அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் விருந்து! ஆனா.. அதுலயும் ஒரு டுவிஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோவாக திகழும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

குறித்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் அசர்பைஜானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அத்துடன் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.


இந்த நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள நடிகர் அஜித்குமார், படக்குழுவினருக்காக தன் கையால் சமைத்து உணவளித்துள்ளார்.

ஏற்கனவே மங்காத்தா பட ஷூட்டிங் டைமிலும்,  வீரம் பட ஷூட்டிங் டைமிலும், நடிகர் அஜித் படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து கொடுத்தது பரவலாக பேசப்பட்டது. 

இவ்வாறான நிலையில், தற்போது விடாமுயற்சி பட ஷூட்டிங் ஸ்பாட்டிலும் தன் கைவண்ணத்தை காட்டியுள்ளார் அஜித். அங்கிருக்கும் படக்குழுவினருக்காக தன் கையால் ஒரு ஸ்பெஷல் உணவு ஒன்றை தயார் செய்து  அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

Advertisement

Advertisement