• Aug 29 2026

இலஞ்சப் புகாரில் செந்தில்.. தூக்கத்தை தொலைத்த மீனா.! பரபரப்பான ஆட்டத்துடன் டுடே எபிசொட்

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பழனி சுகன்யாவுக்காக தாலாட்டுப் பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து குமார் வந்து ரெண்டு பேரும் எப்படி இவ்வளவு ஒற்றுமையா இருக்கீங்க என்று கேட்கிறார். அதுக்கு பழனி புருஷன் பொண்டாட்டிக்குள்ள இப்படித் தான் இருப்பாங்க என்கிறார்.

அதைத் தொடர்ந்து பழனி காந்திமதி கிட்ட சரவணனால அந்த வீட்டில இருக்கிற எல்லாரும் சோகமா இருக்கிறாங்க, நான் தான் அங்க இருக்கிறவங்கள சந்தோசப்படுத்திட்டு வாறனான் என்கிறார். இதைக் கேட்ட குமார் நானும் தான் இவ்வளவு நாளா சோகமா இருந்தேன் என்னை எப்பயாவது சந்தோசப்படுத்திருக்கியா என்று கேட்கிறார்.


அதுக்கு பழனி நீ பண்ண வேலையால தான் நீ இப்படி இருக்கிற என்று சொல்லுறார். மறுபக்கம், மீனா செந்தில் கிட்ட பணம் எப்படி வந்திச்சு என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் சேவிங்ஸ் பணம் தான் என்கிறார். பின் மீனா உண்மையை சொல்லுங்க என்கிறார். மேலும், ஏதாவது தப்பு பண்ணுறீங்களா என்கிறார் மீனா. பிறகு செந்தில் சமாளிச்சிட்டு போய் தூங்கிறார்.

மறுநாள் காலையில மீனா செந்தில் ஒழும்பின உடனே பணம் விஷயத்தைக் கேட்கிறார். மேலும், இலஞ்சம் ஏதும் வாங்குறீங்களா என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் கோபமாக நான் அப்படி எல்லாம் ஒன்னும் பண்ணல என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.  

Advertisement

Advertisement