• Mar 12 2026

இன்றைக்கு எல்லோருக்கும் சாதாரணம்… ஆனா முதலில் ரோல்களில் சிக்கியது நான்தான்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான ‘அஞ்சான்’ திரைப்படம், அக்காலத்தில் வெளியாகும் போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், படம் வெளியான சில நாட்களில் சோசியல் மீடியா விமர்சனங்களும் ட்ரோல்களும் இப்படத்தைச் சூழ்ந்தன.


இப்போது, பல ஆண்டுகள் கழித்து இந்தப் படம் நேற்று (28 நவம்பர் 2025) திரையரங்குகளில் ரீ–ரிலீஸாக திரையிடப்பட்டுள்ள நிலையில், திரைப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி, அந்நாளைய விமர்சனங்களை பற்றி முதல் முறையாக திறந்த மனதுடன் பேசியுள்ளார். அந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

படத்தின் மீதான அக்கால விமர்சனங்களை நினைவு கூர்ந்த லிங்குசாமி, அந்த அனுபவம் தன்னைக் கடுமையாக பாதித்ததாக தெரிவித்துள்ளார்.


அதாவது, “சோசியல் மீடியா ட்ரோலில் சிக்கிய முதல் பெரிய படம் அஞ்சான் தான். ஒரு படத்தை ஓவராக ப்ரொமோஷன் செய்யக் கூடாது என அஞ்சான் படத்துக்கு வந்த ரோல்களை பார்த்து பலர் உதாரணமாக எடுத்துக்கொண்டனர். 

இன்றைக்கு இது எல்லாருக்கும் நடக்கிறது. ஆனால் முதலில் தொடங்கப்பட்டது என்னிடம் இருந்து தான். என் குடும்பம், நண்பர்கள் இல்லை என்றால் நான் சினிமாவை விட்டே கிளம்பியிருப்பேன்.” என்று கூறியிருந்தார். தற்பொழுது இந்தக் கருத்துகள் வைரலாகி வருகின்றது.  

Advertisement

Advertisement