• Apr 18 2026

நடிப்பு அரக்கனின் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படம்! காருக்கு முக்கிய கேரக்டர்? புதிய முயற்சியில் SJ சூர்யா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என போற்றப்படும் எஸ்.ஜே சூர்யா தற்போது பல்வேறு படங்களை கையில் வைத்திருக்கும் நிலையில், மற்றுமொரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எஸ்.ஜே சூர்யா தற்போது ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2, தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐ சி மற்றும் விக்ரம் நடிக்க இருக்கும் சியான் 62, உட்பட்ட பல படங்களில் நடித்து வருகிறார், மேலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,எஸ்.ஜே. சூர்யா தற்போது மீண்டும் ஒரு திரில்லர் கதையை வைத்து படம் ஒன்றை இயக்கி நடிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது.


எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் உருவாகும் படங்களில் பெரும்பாலும் ரொமான்ஸ் கதைகளை மையப்படுத்திய காணப்படும். 

ஆனால் தற்போது அவர் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஆக்சன் திரில்லர் படமாக மட்டுமே இருக்கும் எனவும் அந்த படத்திற்கு 'கில்லர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்த படத்தில் கார் ஒரு முக்கிய கேரக்டரில் இடம்பெறுவதாகவும், ரொமான்ஸ் இல்லாமல் முழுக்க முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை எஸ்.ஜே சூர்யா தயாரித்து முக்கிய வேடத்தில்  நடித்து இயக்க இருக்கிறார் என்பதும், இது குறித்து அதிகார்வபூர்வ  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement