• Jul 05 2026

இந்த அங்கீகாரம் எனக்கல்ல... இந்திய சினிமாவுக்கே! – வைரலாகும் உலகநாயகன் கமலின் பெருமித உரை!

shali / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் பன்முக கலைஞராக திகழும் உலக நாயகன் கமல்ஹாசன், சமீபத்தில் ஆஸ்கர் கமிட்டியால் (Academy of Motion Picture Arts and Sciences) வழங்கப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். இந்த வரவேற்பு குறித்து அவர் வெளியிட்ட உரை தற்போது சினிமா உலகத்தையே தொட்டுள்ள உருக்கமான பதிவாக இணையத்தில் பரவி வருகின்றது.


Academy Membership எனப்படும் ஆஸ்கர் கமிட்டியின் புதிய உறுப்பினராக இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக கமல்ஹாசன் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், உலகளவில் திரைப்படங்களை தேர்வு செய்யும் அதிகாரம் பெற்ற ஆஸ்கர் வாக்காளர்களில் ஒருவராக இவர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.


இந்த அங்கீகாரம் குறித்து தனது உரையை பகிர்ந்த கமல், மிகச் சிறந்த பெருமிதம் மிக்க பதிவை வெளியிட்டார். “இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கானது. என்னை செதுக்கிய எண்ணிலடங்கா கதை சொல்லிகளுக்கானது. இந்திய சினிமா இவ்வுலகிற்கு இன்னும் நிறைய வழங்கவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி பலரது மனதையும் கவர்ந்துள்ளது. 

Advertisement

Advertisement