• May 18 2024

இந்தப் புகைப்படம் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் எடுத்தது அல்ல- விளக்கம் கொடுத்த மனோபாலா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் நடிக்கவுள்ள ஏனைய நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இன்று சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் நடிகர் மனோபாலா உடன் இருக்கும் போட்டோ வெளியாகி வைரல் ஆனது. அதில் சரத்குமார் மற்றும் தேனப்பன் போலீஸ் கெட்டப்பில் இருப்பதால் தளபதி 66ல் அவர்கள் போலீசாக நடிக்கின்றனர் என தகவல் பரவி வருகிறது.

அந்த போட்டோ இணையத்தில் படுவைரல் ஆன நிலையில் தற்போது மனோபாலா அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.அது தளபதி 66 செட்டில் நடந்த சந்திப்பு அல்ல என அவர் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement