• May 17 2024

கார்த்தியுடன் கை கோர்க்கும் விஜய்சேதுபதி- இந்தப் படத்திலும் வில்லன் கதாப்பாத்திரம் தானாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதால் இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புக் காணப்படுகின்றது.

இவர் தற்போது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய தனித்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதனால் இந்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில், நடிகர் கார்த்தி முதல் முறையாக சென்சேஷன் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய்சேதுபதி இதில் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இயக்குநர் ராஜு முருகன் ஏற்கனவே வெளிவந்த குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய சென்சேஷன் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement